Sunday, December 14, 2025
Huis Blog Bladsy 109

ரமலான் புனித மாதத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

0

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமே ரமலான். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பிருந்து, இறை வணக்கங்களில் ஈடுபட்டு, அவரிடம் பிரார்த்திக்கும் ஒரு புனிதமான காலமாகும்.

2025 ஆம் ஆண்டில், அதாவது இஸ்லாமிய சந்திர வருட அடிப்படையில், ஹிஜ்ரி 1446 ஆம் வருட ரமலான் மாத பிறை கண்டதைத் தொடர்ந்து நோன்பு ஆரம்பமாகும்.

ரமலான் என்றால் என்ன?

ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உணவு உண்ணவோ, நீர் அருந்தவோ மாட்டார்கள். இது நோன்பு எனப்படும்.

ரமலான் மாதத்தை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறார் :

”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” அல்குர்ஆன் 2 ஆவது அத்தியாயம்:183 ஆவது வசனம்

ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

பல முஸ்லிம்கள் ரமலானில் முடிந்தவரை குர்ஆனைப் படிக்க முயற்சிப்பார்கள்.

ரமலான் என்பது ஆன்மீக சிந்தனை, பிரார்த்தனை, நல்ல செயல்களைச் செய்தல் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதற்கான நேரமாகும்.

இதனாலேயே நோன்பு கடமையான ரமலான் மாதத்திற்குப் “பொறுமையின் மாதம்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு. “நோன்பு, பொறுமையின் சரி பாதி’ என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதைத் திர்மிதீ, அஹமது முதலிய நூல்களில் காணலாம்.

பொதுவாக, மக்கள் தங்கள் சமூகங்களுடன் இணைவதற்கும், உதவி தேவைப்படும் நபர்களை அணுகுவதற்கும் சிறப்பான முயற்சியை மேற்கொள்வார்கள்.

2025 இல் ரமலான் எப்போது தொடங்கி முடிவடைகிறது?

ரமலான் மாதம் ஆரம்பித்து 29 ஆம் நாளில் ஷவ்வால் மாத பிறை பார்க்கப்படும். பிறை தென்பட்டால் மறுநாள் பெருநாள் கொண்டாடுவர். பிறை தென்படவில்லை எனில் ரமலான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்துவிட்டு பின்னர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுவர்.

அதன்படி, மார்ச் 01 ஆம் திகதி மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து, மார்ச் 02 ஆம் திகதி நேற்று முதல் ரமலான் மாத நோன்பு காலம் ஆரம்பமானது.

உலகலவில் வெவ்வேறு நாடுகளிலும் இவ்வாறு பிறை பார்த்து அதற்கேற்ற வகையில் நோன்பை ஆரம்பித்து 29 அல்லது 30 நாட்களின் பின்னர் பெருநாளை கொண்டாடுவர்.

ஒவ்வொரு வருடமும் ரமலான் ஆரம்பம் ஏன் மாறுகிறது?

ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் திகதி மாறுகிறது, ஏனெனில் இஸ்லாம் சந்திர நாட்காட்டியை (சந்திரனின் சுழற்சிகளின் அடிப்படையில்) பயன்படுத்துகிறது, எனவே இது கிரிகோரியன் அல்லது சூரிய நாட்காட்டியில் நிலையான திகதி அல்ல.

இஃப்தார் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

ரமலானின் போது, அதிகாலையில் ஒரு உணவு (சுஹூர் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றொரு உணவு (இப்தார் என அழைக்கப்படுகிறது) பொதுவாக உள்ளது.

உண்ணாமல் தீய செயல்களில் ஈடுபடாமல் பசித்து தாகித்திருந்து சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை துறந்து இப்தார் சாப்பிடுவார்கள்.

யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ

குழந்தைகள் ரமலான் நோன்பில் பங்கேற்கலாமா?

ரமலானில் அனைவரும் நோன்பு நோற்பதில்லை – உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே நோன்பு கடமையாகிறது.

சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
முஸ்லிம் சிறுவர்கள் பொதுவாக பருவமடைவதற்குள் நோன்பு நோற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

ரமலான் வேறு எப்படி அனுசரிக்கப்படுகிறது?

ரமலான் முழுவதும், பெரியவர்கள் தொண்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு ஸதகா செய்ய வேண்டும். அதிகதிகமாக தான தர்மங்களில் ஈடுபட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் பல நல்ல அமல்கள் செய்யப்படுகின்றன. இரவு நேர விசேட தொழுகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

முஸ்லிம்கள் அதிகதிகமாக குர்ஆன் ஓதுவதிலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலும் ஈடுபடுவார்கள்.

பல மில்லியன் ரூபாய்களை ஓவர்டைமில் ஏப்பம் விட்ட தொழிற் சங்கவாதிகள் – பிரதியமைச்சர் அருண்

0

ஜே குணவர்தன என்ற நபர் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரைக்கும் 13,120 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். அதற்காக அவர் 85 லட்சம் ரூபாய்களை கொடுப்பனவுத் தொகையாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார் என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது,

நிஷாந்த் என்ற நபர் 2592 மணித்தியாலங்களை ஓவர்டைமாக செய்திருக்கிறார். 20 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பானாக பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆர் கமகே என்ற ஒரு நபர் 13 ஆயிரத்து 900 மணித்தியாலங்களை ஓவர் டைம் ஆக செய்திருக்கிறார். இவர் 84 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றிருக்கிறார்.

அதேபோல பிரேமலால் என்று நபரும் 421 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பனவாக பெற்று இருக்கிறார்.

அதுபோன்றே ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தொழிற் சங்கவாதியை எடுத்துக் கொண்டால் 2015 ,2016, 2017, 2018 ஆகிய நான்கு வருடங்களில் 5615 மணித்தியாலங்களுக்கு ஓவர்டைம் கொடுப்பனவாக 31 லட்சத்துக்கு அதிகமான தொகையை அவர் பெற்றிருக்கிறார்.

அவர் தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு, அவர் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

வவுனியா சைவ உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி..!

0

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு இன்றைய தினம் சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணபட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.

தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடை வாங்கியரிடம் சைவ உணகவ முகாமையாளர் மன்னிப்பு கோரியதாகவும் தெரியவந்துள்ளது

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

0

இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் மார்ச் 07 திகதி முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk-ஐப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனுமதி அட்டையில் உள்ள பாடம், மொழி மற்றும் பெயரில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், மார்ச் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு மாற்றங்களை இணையதளத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய இராசி பலன்கள் (03.03.2025)

0

மேஷம்

இன்று அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்

இன்று சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்

இன்று எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம்; அழகான வாரிசு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

கடகம்

இன்று அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்

இன்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி

இன்று புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

துலாம்

இன்று அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்

இன்று வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வேலைபளு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு

இன்று ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி வந்துபோகும். நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். மாணவர்கள் விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்

இன்று பெரியோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். தொழிலில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்

இன்று கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பங்குதாரர்களையும் சேர்ப்பீர்கள். எல்லோரும் மதிப்பார்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மோசடியாளர்களிடம் பணத்தை இழந்து விடாதீர்கள் – இலங்கை மத்திய வங்கி

0

மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை மத்திய வங்கி மக்களை எச்சரித்துள்ளது.

இவ்வாறான மோசடித் திட்டங்களில் ஈடுபட்டு உங்கள் பணத்தை இழந்து விடாதீர்கள் எனவும் மத்திய வங்கி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவை முதலீட்டு வாய்ப்புகள் என விளம்பரம் செய்யப்பட்டாலும், அவை சட்டவிரோதமான பிரமிட் நிதியமைப்புகளாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதனை தவிர்க்குமாறு மத்திய வங்கி, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சில நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் பெயரைத் தவறாக பயன்படுத்தி இந்த விளம்பரங்களைச் செய்து வருவதாகவும், இது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவுகள் இந்த மோசடிகளை விசாரணை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கொக்குத்தொடுவாய் புதைகுழி: விரைவில் வெளிவரவுள்ள இறுதி அறிக்கை..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

அந்த வகையில் கடந்த 27.2.2025 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க. வாசுதேவா மற்றும் காணாமல் போனோர் அலுவலக சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க வாசுதேவா,

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டு அறிக்கைகள் என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்த உடைகள் தொடர்பான ஆய்வறிக்கையும் இரண்டாவதாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணியின் போது அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆட்களை இனம் காணக்கூடிய பொருட்கள் சம்பந்தமான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

நிச்சயமாக இரண்டாவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத் தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த இலக்கத்தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இறுதி அறிக்கை எதிர்வரும் ஆறு வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது இறுதி அறிக்கையின் போது சட்ட வைத்தியர்களின் பூரண அறிக்கை இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் அவர்களின் வயது, உயரம் போன்ற விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் ஆறு வார காலத்தில் சமர்ப்பிக்கப்படும் இல் வழக்கானது அடுத்த தவணைக்காக மார்ச் 27 க்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்

சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடுகளைத் தடுக்க சிறப்புத் திட்டம்..!

0

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க, கண்காணிப்பாளர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி பரீட்சைக் காலத்தில் மாணவர்களின் நடத்தை குறித்து கண்காணிப்பதற்கு கண்காணிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சி அளிக்கப்படும்.

இதேவேளை மார்ச் 17 முதல் 26 வரை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத்திணைக்களம் உறுதியளித்துள்ளது.

இதற்கிடையில், இந்த மாதம் 15 ஆம் திகதி பரீட்சைமையங்களுக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.

கேரள கஞ்சா மற்றும் கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது..!

0

1360 மில்லி கிராம் கேரள கஞ்சா மற்றும் 2.6 அங்குலம் கொண்ட கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 4 மணிக்கு தியகலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஹட்டன் பொலிசார் வீதி தடை இட்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்த பஸ் ஒற்றை சோதனையிட்ட போது பௌத்த பிக்குவிடமிருந்து கஞ்சா 1360 மில்லி கிராம் கஞ்சா சுருட்டு ஒன்றும் கைப்பற்றபட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யபட்டவர் 27 வயதுடைய கிரிமெட்டிய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவரை நாளை 3 ஆம் திகதி காலை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; இனங்காண உதவுமாறு கோரிக்கை..!

0

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட பொருட்களின் விபரம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இலக்கத் தகட்டுக்கு உரியவர்களின் உறவினர்கள் அல்லது விபரம் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

error: Content is protected !!