Wednesday, April 29, 2026
Huisதாயகம்யாழ். நாகர்கோவில் - நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்..!

யாழ். நாகர்கோவில் – நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்..!

யாழ். வடராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எவ்வித உத்தியோக பூர்வ அறிவிப்புக்களும் இன்றி திடீரென இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

25 வருடங்களுக்கு மேலாக முகாம் அமைத்து இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

மேலும், பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!