Tuesday, April 28, 2026
Huisதாயகம்யாழில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்; மாணவிகள் ஆசிரியைகளின் ஆபாச படங்கள்..!

யாழில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்; மாணவிகள் ஆசிரியைகளின் ஆபாச படங்கள்..!

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 வயதுடைய குறித்த மூன்று மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (28) அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன், மாணவர்களை புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள ‘சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்’ (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகப் பொலிஸார் நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது சட்டத்தின் ஊடாக அதிபர், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துச் செல்வதையே காணக் கூடியதாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!