நவநீதம்பிள்ளைக்கான நோபல் பரிசு வழங்கிய விடயத்தினை இஸ்ரேஸ் பிரதமரின் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
குறித்த சமூக வலைத்தள செய்திக் குறிப்பில்,
நோபல் பரிசுக்குழு தனது ஒழுக்கநெறி சார்ந்த வழிகாட்டுதலை இழந்து விட்டது. ஒரே ஒரு யூத நாடான இஸ்ரேலுக்கு எதிராகப் பொய்ப் புகார்களைப் புனைந்து பரப்புவதையே தனது வாழ்க்கைப் பணியாகக் கொண்ட ஒரு வெறிப்பிடித்த நபர், அதன் மிக உயரிய கௌரவத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நவி பிள்ளையின் மிகவும் பெருமைக்குரிய சாதனை என்னவெனில், ஊழல் நிறைந்த ஒரு அரசு வழக்கறிஞரை நியாயப்படுத்தியதே ஆகும்; அவர் தன் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கும் நோக்கில், நவி பிள்ளையின் வெறிப்பிடித்த கும்பலோடு இணைந்து இஸ்ரேலுக்கு எதிரான அவரது புனைவுகளைப் பயன்படுத்திக் கொண்டார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) சொந்த ஊழியர்களாலேயே பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கரீம் கான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு போலி வழக்கைக் கட்டமைக்க பிள்ளையின் பொய்களைப் பயன்படுத்தினார். பிள்ளை பொய்களை வழங்கினார். கான் அவற்றை ஆயுதமாக்கினார்.
இப்போது, வழிதவறிய நோபல் குழுவின் உறுப்பினர்கள், யூதர்களுக்கு எதிரான இந்த இழிவுபடுத்தலையும் நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியையும் பரப்பிய ஒரு பெண்ணைக் கௌரவித்து வருகின்றனர். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அமைத்த சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக நவநீதம் பிள்ளை பணியாற்றிய போது, இஸ்ரேல் மீது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இந்த பின்னணியில், இஸ்ரேல் பிரதமரின் நிலைப்பாடு அவருக்கு எதிராக அமைந்துள்ளது.


Recent Comments