Sunday, November 15, 2026
Huisதாயகம்அதிகரித்த சமையல் எரிவாயு விலை; லாஃப்ஸ் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை..!

அதிகரித்த சமையல் எரிவாயு விலை; லாஃப்ஸ் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை..!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபையில் நாளை (16.11.2026) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் கோருவதற்காகவே குறித்த நிறுவனம் அழைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விலைகளை அதிகரித்திருந்தது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது 2,720 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளிந்த குருகுலசூரிய நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விலை அதிகரிப்புக்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்துக் கட்டண உயர்வு மற்றும் காப்புறுதிக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!