கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியா காணி உரிமையாளர் கோகிலரமணியால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவின் அடிப்படையில் இன்றைய தினம் (31-08-2026) வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் முன்னிலையாகி இருந்தனர்.
அதே சமயம் அரச சட்டத்தரணி, திருக்கோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் W. W. சுரங்க பெரேராவும் வருகை தந்திருந்தார்.
வழக்கின் போது 2019 ஆம் ஆண்டு இரு தரப்புக்கு இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான உரிமை மாத்திரமே கன்னியா விடயத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் புனர்நிர்மாணம் செய்வதற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கு வாதம் வைக்கப்பட்டது.
மேலும் அரச சட்டத்தரணியால் குறித்த இடத்தை பார்வையிட்டு வாதங்களை முன்வைக்க காலம் கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் அதுவரையான காலப் பகுதியில் எந்த புதிய கட்டுமானப் பணிகளையோ, மாற்றங்களையோ செய்யக் கூடாது என்ற உத்தரவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments