2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், வவுனியா முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயம் வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
செட்டிகுளம் கோட்ட மட்டத்தில் மிக உயர்ந்த புள்ளிகளைப் பெற்று கோட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களைக் கைப்பற்றியதுடன், இப்பாடசாலையைச் சேர்ந்த 6 மாணவர்கள் தேர்ச்சியடைந்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன், வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்ட அளவில் மட்டுமன்றி, வவுனியா மாவட்ட மட்டத்திலும் 3-ஆம் இடத்தைப் பெற்று இப்பாடசாலை மாபெரும் சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த மாணவச் செல்வங்கள்:
1. றொ. திபிஷன் – 167 புள்ளிகள் (செட்டிகுளம் கோட்டத்தில் முதலாம் இடம் & வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் இடம்)
2. ச. வருசிகன் – 154 புள்ளிகள் (செட்டிகுளம் கோட்டத்தில் இரண்டாம் இடம்)
3. ஸ். டிக்சித் – 149 புள்ளிகள்
4. செ. டிதுஷன் – 141 புள்ளிகள்
5. நி. யுவான் கிஷாந் – 139 புள்ளிகள்
6. மெ. மெக்சிகா – 134 புள்ளிகள்
கிராமப்புறப் பின்னணியில் இருந்து கொண்டு, வலய மற்றும் மாவட்ட மட்டத்தில் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இம்மாணவர்களை திறம்பட வழிநடத்தி இந்த வரலாற்றுச் சாதனைக்கு வித்திட்ட வகுப்பாசிரியர் திரு. மு. ச. மு. றிஸ்மி அவர்களுக்கும், பாடசாலையைச் சிறப்பாக வழிநடத்திய அதிபர் திருமதி. நா. தமிழ்ச்செல்வி அவர்களுக்கும், தொடர் ஆதரவளித்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்திலும் இப்பாடசாலை மேலும் பல சாதனைகளைப் படைத்து சிகரம் தொட உளமார வாழ்த்துகிறோம்.








Recent Comments