மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாள் வருவதால், மக்கள் அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் செயலகத்தினால் இந்த விடுமுறை அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வழங்கப்படும் விடுமுறை நாளுக்குப் பதிலாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை அன்று பதில் பாடசாலை நாளாகக் கருதி பாடசாலைகளை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.


Recent Comments