அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளது.
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை, உத்தியோகபூர்வ தங்குமிடப் பிரச்சினைகள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள சங்கத்தின் மாவட்டக் கிளை பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளதாக GMOA உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் போராட்டம் பணிப்புறக்கணிப்பாக அமையாது என்றும், அனைத்து வைத்தியசாலைகளிலும் வழமையான மருத்துவ சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தீர்வுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


Recent Comments