கடந்த நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி பண்டிகை அன்று இரவு வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமை தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில், மனோ கணேசன் செலுத்திச் சென்ற லேண்ட் குரூஸர் ரக ஜீப் வாகனம் மற்றுமொரு ஜீப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் இரு ஜீப் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் மனோ கணேசனுக்கு எதிராக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Recent Comments