Saturday, November 14, 2026
Huisதாயகம்ருவன்வெலிசாய மோதல்; காயமடைந்த ராஜாங்கனை சத்தாரதன தேரருக்கு 14 தையல்கள்..!

ருவன்வெலிசாய மோதல்; காயமடைந்த ராஜாங்கனை சத்தாரதன தேரருக்கு 14 தையல்கள்..!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பிக்குகள் முன்னெடுத்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்குள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்கள் போடப்பட்ட நிலையில் வைத்திய சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், மீண்டும் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் அநுராதபுரத்துக்குத் திரும்புவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது சிகிச்சைக்கு உதவிய வைத்திய சாலைப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவிலேயே ராஜாங்கனை சத்தாரதன தேரர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!