தற்போதைய அரசாங்கத்தைக் கண்டு அச்சப்படும் பௌத்த தேரர்கள் எவரும் நாட்டில் இல்லை எனத் தெரிவித்துள்ள இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், நாமல் ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்கிய பின்னரே தாம் ஓய்வெடுக்கப் போவதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பவர்களையும் அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், “இந்த அரசாங்கத்தைக் கண்டு பயப்படும் தேரர்கள் யாரும் இங்கு இல்லை. அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பவர்கள் இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாமலை நாட்டின் ஜனாதிபதியாக்கிய பின்னரே நாங்கள் இந்த அரசியலை முடிப்போம்” என அவர் காரசாரமாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தற்போதைய போக்கைக் கண்டித்தும், நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வருகை மற்றும் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இத்தேகந்தே தேரர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, நாட்டின் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Recent Comments