பதுளை போதனா வைத்திய சாலையில் பணியாற்றும் மயக்கவியல் நிபுணத்துவ வைத்தியர் ஒருவர் நேற்று (23) காலை பணியில் இருந்தபோது திடீரென காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக திகழும் வைத்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன வைத்தியரின் கார் மகியங்கனை நோக்கி வேகமாக செல்வது மீகஹகிவுல பகுதியில் உள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலின் போது, பதுளை – மகியங்கனை வீதியில் மாபாகடவெவ பகுதியில் உள்ள கால்வாய் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் அவரது கார் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வாகனம் மட்டும் மீட்கப்பட்டுள்ளதால், வைத்தியரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது.
அவர் மர்மமான முறையில் காணாமல் போனதன் பின்னணி என்ன என்பதை கண்டறிய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன வைத்தியரை மீட்பதற்காக பொலிசார், குற்றவியல் கள பரிசோதனை பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.


Recent Comments