Monday, August 24, 2026
Huisதாயகம்ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டின் எதிரொலி; பிரபாகரனுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரம்..!

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டின் எதிரொலி; பிரபாகரனுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரம்..!

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முறைப்பாடு அளித்த ஈரோஸ் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக, சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறித்த முறைப்பாட்டை சட்டரீதியாகவோ அல்லது கருத்து ரீதியாகவோ எதிர்கொள்ள முடியாத சிலர், இணைய வழியில் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட சம்பவங்களை திரித்து பிரசாரம்

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபாகரனின் குடும்பத்திற்குள் நடந்த சில தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து, அவற்றை தவறாகத் திரித்து தமிழ் யுவதிகளுடன் தொடர்புபடுத்தி இணையத்தில் போலிப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

அரசியல் மற்றும் சட்டரீதியான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தவறி, சமூக வலைதளங்கள் மூலம் குற்றச்சாட்டுகளை மறைக்கவும், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!