Tuesday, August 25, 2026
Huisதாயகம்OMPயின் நாடகம்; யாழ். மாவட்ட செயலகம் முன் வெடித்த போராட்டம்; பொலிசார் அராஜகம்..!

OMPயின் நாடகம்; யாழ். மாவட்ட செயலகம் முன் வெடித்த போராட்டம்; பொலிசார் அராஜகம்..!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (25) குறித்த போராட்டம் நடைபெற்றது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (omp) ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரணச் சான்றிதழும் வேண்டாம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் களத்தில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடுமையாக முரண்பட்டுள்ளனர்.

இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!