Thursday, August 27, 2026
Huisஜோதிடம்இன்றைய இராசிபலன் 26.08.2026

இன்றைய இராசிபலன் 26.08.2026

மேஷம்

அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். முன்கோபம் நீங்கும். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவி யை நாடுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்.சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்

வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்

விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கன்னி

உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரலாம். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

துலாம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்

பணவரவு திருப்தி தரும். சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

தனுசு

வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர் அறிமுகமாவார். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மகரம்

கையிருப்பு கரையக் கூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கலாம். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்

எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் இன்று வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்

ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!