Thursday, August 27, 2026
Huisஜோதிடம்இன்றைய இராசிபலன் 27.08.2026

இன்றைய இராசிபலன் 27.08.2026

மேஷம்

பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்சி யுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.

மிதுனம்

மனதை உறுத்திய விஷயத்துக்கு முடிவு கட்டுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கடகம்

தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன் கோபத்தை தவிர்க்கவும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

சிம்மம்

தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அன்பு காட்டுவர்.

கன்னி

தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

துலாம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம்

புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. தந்தையின் உடல்நலம் சீராகும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து, திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.

மகரம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

கும்பம்

பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். குழப்பம் நீங்கி வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவல கத்தில் உங்களின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்

உங்கள் புதுமுயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினை தீரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!