Friday, September 4, 2026
Huisதாயகம்சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்; 14 நாட்கள் விளக்கமறியல்..!

சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்; 14 நாட்கள் விளக்கமறியல்..!

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!