“என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், தாம் கைது செய்யப்பட்டு கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டாலும், 12ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments