முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) மற்றும் ஜன அரகலய இயக்கம் இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் பங்கேற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டப் பேரணி பொரளை கெம்பல் பார்க் அருகில் ஆரம்பமாகி, கொழும்பு ஊடாக கோட்டை புகையிரத நிலையம் நோக்கி சென்றுள்ளது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டப் பேரணி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் முன்னதாக மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Recent Comments