Sunday, November 15, 2026
Huisதாயகம்சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..!

சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..!

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்த மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழ்தேசிய மூத்த அரசியல் செயற்பாட்டாளர் சிவாஜிலிங்கம் அவர்களுக்கான இரங்கல் செய்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்த மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், தேசிய அபிலாசைகள் மற்றும் நீதிக்கான போராட்டங்களில் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள்.

தமிழ் மக்களின் உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து, பல்வேறு அரசியல் சூழல்களிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற அவரது பங்களிப்புகள் என்றும் நினைவு கூரத்தக்கவை. அவரது மறைவு தமிழ் அரசியல் சமூகத்திற்கும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாரது ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!