Monday, November 9, 2026
Huisதாயகம்TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை..!

TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை..!

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 1.3 கோடி பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.7 கோடியாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 40 இலட்சம் பேர் TIN இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “தற்போது சுமார் 1.3 கோடி பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெறுவதற்காகத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்த சுமார் 1.7 கோடி பேர் உள்ளனர். மேலும் 40 இலட்சம் பேர் பதிவு செய்ய வேண்டியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சில அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், சட்டத்தின்படி 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் பலரிடையே தேவையற்ற அச்சம் நிலவுகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. வரி செலுத்த வேண்டிய வருமான வரம்பை அடையாதவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

வரி முறைமையை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே இந்தச் சட்ட ஏற்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!