கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் ஆயுத முனையில் பலரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரும் வாகன சாரதி உள்ளிட்ட குழுவினரால் கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.


Recent Comments