Tuesday, November 10, 2026
Huisதாயகம்கொழும்பு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் விபத்து; ஐவர் பலி..!

கொழும்பு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் விபத்து; ஐவர் பலி..!

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும், அக்கரைப்பற்றில் இருந்து , யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ் – அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் , பலர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்துகள் விபத்துக்குள்ளான போது , அந்த பேருந்தின் பின்னால் , வந்த தனியார் பேருந்தும் இவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்துமே மோதி விபத்துக்குள்ளியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம், ரம்பேவ மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!