Tuesday, November 10, 2026
Huisதாயகம்நுவரெலியா விடுதியில் அம்பாறை யுவதி கொலை; காதலன் தலைமறைவு..!

நுவரெலியா விடுதியில் அம்பாறை யுவதி கொலை; காதலன் தலைமறைவு..!

நுவரெலியா, மாகாஸ்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, கட்டணம் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (10) திங்கட்கிழமை காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சடலம் தொடர்பில் நீதவானின் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!