Friday, November 13, 2026
Huisதாயகம்மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர்; ஆசிரியர்கள் கண்டன போராட்டம்..!

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர்; ஆசிரியர்கள் கண்டன போராட்டம்..!

திருகோணமலையில் ஆசிரியர் ஒருவர் மீது மாணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (13.11.2026) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை – அபேயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை பொலிசார் மற்றும் கல்வித் திணைக்களம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (நவம்பர் 13) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!