ஈழத் தமிழ் மக்களை யார் பாதுகாப்பது? – சாணக்கியன் கேள்வி

“கொலை மிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



“சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி பதிவிட்ட பல இளைஞர்களுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ள போதிலும், சனல் 4 குற்றம் சாட்டியுள்ள ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எதிராக விசாரணை இடம்பெறவில்லை இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.