Sunday, August 23, 2026
Huisதாயகம்ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதிரடியாகக் களத்தில் இறங்கிய பிரபாகரன்..!

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதிரடியாகக் களத்தில் இறங்கிய பிரபாகரன்..!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன்,

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

அந்த வகையில் ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக் கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும் நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர் அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருத வேண்டாம்.

மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!