Sunday, August 23, 2026
Huisதாயகம்யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயதுடைய இளைஞன் கைது..!

யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயதுடைய இளைஞன் கைது..!

யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதனை அறிந்த பொலிசார், இளைஞனை கைது செய்ததுடன் , சிறுமியையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!