கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார ரயில் திட்டத்தின் பணிகள், ஆரம்பக்கட்ட திட்டமிடல்கள் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதி அமைச்சர் ருவன் சேனரத் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், முன்மொழியப்பட்டுள்ள இந்த மின்சார ரயில் சேவை மருதானையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும், பயணிகளுக்கு மிகவும் திறமையான மற்றும் நவீன பொதுப் போக்குவரத்து அமைப்பை வழங்குவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த திட்டமிடப்பட்ட அமைப்பின் கீழ், ‘ருஹுணு குமாரி’ ரயிலில் பெலியத்தவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி, இந்த புதிய மின்சார ரயில் வலையமைப்பைப் பயன்படுத்தி கொழும்பு நோக்கித் தங்களின் பயணத்தைத் தொடர முடியும்.
நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பல அபிவிருத்திகள் குறித்தும் பிரதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அரசு போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக ‘மெட்ரோ பேருந்துகள்’ (Metro buses) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Recent Comments