Sunday, August 23, 2026
Huisஉலகம்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் - வானிலை ஆய்வு மையம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் – வானிலை ஆய்வு மையம்

ஜப்பான் – டோக்கியோ நகருக்கு அருகில் இன்று(23) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதுடன் நகரத்தின் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டுள்ளது.இதனால் நாட்டின் எச்சரிக்கை அமைப்புகள் வீதிகளில் பொது அறிவிப்புகள் மற்றும் சைரன்களை ஒலிக்கச் செய்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களிலும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

டோக்கியோவிற்கு அருகிலுள்ள இபராக்கி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், நிலநடுக்கம் 68 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த மையம் மேலும் தெரிவித்தது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!