Monday, August 24, 2026
Huisசினிமாசினிமா தொழில் துறையினரின் நேரடிப் பங்கேற்புடன் சிகரம் Film & Media கற்கை அங்குரார்ப்பணம்..!

சினிமா தொழில் துறையினரின் நேரடிப் பங்கேற்புடன் சிகரம் Film & Media கற்கை அங்குரார்ப்பணம்..!

ஜனநாயகன், ராயன் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் ட்ரோன் படப்பிடிப்புச் செய்த Dronemane அரவிந்த்குமாரின் சினிமற்றிக் ட்ரோன் பயிற்சி மற்றும், யாழ்ப்பாணம், இந்திய சினிமா தொழிற் துறையினரின் நேரடிப் பங்கேற்புடன் சிகரம் நிறுவனத்தின் Film & Media கற்கைநெறி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

சிகரம் நிறுவனம் தற்சமயம் இயங்கி வரும், யாழ் பேரூந்து நிலையம், வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு வளாக மண்டபத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

சிகரம் Film & Media கற்கை அங்குரார்ப்பணத்தையொட்டி ஓகஸ்ட் 18ம் திகதி முதல் 20ம் திகதிவரை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற Droneman அரவிந்த்குமாரின் ட்ரோன் பயிற்சிகளைத் தொடர்ந்து, 21ம் திகதி வெள்ளிக் கிழமை ட்ரோன் பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வுடன் சிகரம் Film & Media கற்கைநெறி தொடக்கி வைககப்பட்டது.

அந்தோனி திரைப்பட இணை இயக்குநர் சுகிர்தராஜ், ‘பகிடியாகக் கதைப்போம்’ புகழ் ஜனார்த்தனன், ஏ.கே.கமல் ஸ்ரூடியோ உரிமையாளர் கமல், ஹிமாலயா க்ரியேஷன்ஸ் துவாரகன் உள்ளிட்ட யாழ் திரைத்துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள் இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்டு, ட்ரோன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்து, சிகரம் Film & Media கற்கை நெறியையும் தொடக்கி வைத்தனர்.

யாழ் பல்கலைக் கழக ஊடகக் கற்கைத்துறை, Aquinas College ஒளிப்பட மற்றும் சினிமா கற்கைப்பிரிவு, யாழ் இந்துக் கல்லூரி ஒளிப்படக் கழகம், சென்ஜோன்ஸ் கல்லூரி, சென் பற்ரிக்ஸ் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுடன், துறைசார் செயற்பாட்டாளர்களும் சுமார் 20 பேர் ட்ரோன் பயிற்சி பெற்று சான்றிதழளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிகரம் Film & Media கற்கை பற்றிய அறிமுகமும், மாணவர்கள் – துறைசார் செயற்பாட்டாளர் இடையேயான கலந்துரையாடலும் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட திரைப்படத்துறைச் செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமாக,

ஈழத்தில் பிறந்து தென்னிந்திய சினிமவாக நீளிரா திரைப்படத்தைப் படைத்த இயக்குநர் சோமீதரன், விரைவில் வெளியாகவிருக்கும் போராட்டம் திரைப்பட பணிகளுக்காக இந்தியா சென்றிருந்த யாழ் சினிமாத் துறையைச் சேர்ந்த புத்தி கெட்ட மனிதர்கள் மற்றும் தீப்பந்தம் திரைப்பட புகழ் ராஜ் சிவராஜ், மதீசன் ஆகியோர், அந்தோனி இணை இயக்குநர் ஜெனோசன், வெந்து தணிந்தது காடு திரைப்பட புகழ் மதி சுதா உள்ளிட்ட ஈழத்தின் திரைப்படத்துறை முன்னோடிகள் பலரும் சிகரம் Film & Media கற்கைநெறிக்கான தமது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன், தமது எதிர்கால திரைப்பட முயற்சிகளில் சிகரம் Film & Media மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஈழ சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாத்துறை வாய்ப்புகளை வழங்கும் இந்தக் கற்கைநெறி அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதால், புதிதாக இணைந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் கீழுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

077 732 4004

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!