மேஷம்
குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.
ரிஷபம்
வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். எதிலும் பொறுமை தேவை.
மிதுனம்
குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். அலுவலக விஷயமாக அலைச்சல், அசதி ஏற்படும்.
கடகம்
வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
இழுபறியாக உள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபட மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படு வீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
துலாம்
உங்களது வெளிப்படையான, சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்று வலி குணமாகும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் பொறுமை அவசியம்.
தனுசு
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். திடீர் பயணம், அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும்.
மகரம்
புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.
கும்பம்
பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியூர் பயணம் திருப்தி தரும்.
மீனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்சினைகள் ஓயும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.


Recent Comments