Sunday, September 27, 2026
Huisதாயகம்திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; யாழில் போராட்டம்..!

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; யாழில் போராட்டம்..!

யாழ் நல்லூர் பகுதியில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்துச் சென்றதைக் கண்டித்து, சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக இன்று (27) மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

தியாகதீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வாக கடந்த 15ஆம் திகதி நினைவாலயப் பகுதியில் சிலை வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, நேற்று (26) இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் நினைவாலயத்திற்கு வருகை தந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!