Friday, November 6, 2026
Huisதாயகம்தீபாவளியைக் கொண்டாடும் முகமாக தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

தீபாவளியைக் கொண்டாடும் முகமாக தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் முகமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி, கலாசார, கலை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளித் திருநாள் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதைக் கருத்திற்கொண்டு, பண்டிகையைக் கொண்டாடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கும் ஏதுவாக ஆளுநரின் அனுமதியுடன் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களும் தமக்குக் கீழ் இயங்கும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு 09 அன்று உரிய விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜீ.எல்.வர்ணன் பெரேரா கையொப்பமிட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!