Sunday, November 8, 2026
Huisகட்டுரைகள்அர­சாங்­கத்­தினால் கொண்­டு­ வ­ரப்­ப­ட­வுள்ள புதிய சட்­ட­மூலத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்..!

அர­சாங்­கத்­தினால் கொண்­டு­ வ­ரப்­ப­ட­வுள்ள புதிய சட்­ட­மூலத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்..!

பயங்­க­ர­வாத தடைச் ­சட்­டத்­துக்குப் பதி­லாக அர­சாங்­கத்­தினால் கொண்­டு­ வ­ரப்­ப­ட­வுள்ள, பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அரசைப் பாது­காக்கும் சட்­ட­மூலம் மற்றும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களைத் தடுக்கும் சட்­ட­மூலம் என்­ப­வற்றை அர­சாங்கம் மீளப் பெற­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி விட்டு அதற்குப் பதி­லாக பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அரசைப் பாது­காக்கும் சட்­ட­மூ­லத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது.

இந்த சட்­ட­மூலம் அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு கடந்த 6ஆம் திகதி நீதி­ய­மைச்சர் ஹர்­சன நாண­யக்­கா­ர­வினால் முதலாம் வாசிப்­புக்­காக சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் சட்­ட­மூ­லத்­துக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் 23 அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அரசைப் பாது­காக்கும் சட்­ட­மூலம் ஏற்­கெ­னவே இருந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினை விட பார­தூ­ர­மா­னது என்று எதி­ர­ணி­யி­னரும் மனித உரிமை அமைப்­பு­களும் குற்­றம்­சாட்டி வரு­கின்­றன.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே இந்த சட்­ட­மூ­லத்­துக்கு எதி­ராக பல்­வேறு தரப்­பி­னரும் உயர்­நீ­தி­மன்­றத்தில் மனுக்­களை தாக்கல் செய்­தி­ருந்­தனர். இதே­போன்றே ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களை தடுக்கும் சட்­ட­மூலம் அர­சாங்­கத்­தினால் தற்­போது வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த சட்­ட­மூ­லமும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் உள்ள அம்­சங்­களை விட பயங்­க­ர­மான விட­யங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தா­கவும் பல்­வேறு தரப்­பி­னரும் குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தாகக் கூறும் அர­சாங்கம், அதி­லுள்ள விட­யங்­களை பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அரசை பாது­காக்கும் சட்­ட­மூ­லத்­திலும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களை தடுக்கும் சட்­ட­மூ­லத்­திலும் உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக சட்ட வல்­லு­நர்­களும் மனித உரிமை ஆர்­வ­லர்­களும் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர். இத­னால்தான் இந்த இரண்டு சட்­ட­ மூ­லங்­க­ளையும் அர­சாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில், அர­சாங்­கத்தின் அங்­க­மான இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வா­னது ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களைத் தடுப்­ப­தற்­கான சட்­ட­மூலம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள, ஒழுங்­க­மைக்­கப்­பட்­டுள்ள குற்­றங்­களைத் தடுப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விட மிக மோச­மான சட்­ட­மூலம் என்று விப­ரித்­தி­ருக்கும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு, அதனை வாபஸ்­பெற்று சர்­வ­தேச மனித உரி­மைகள் நிய­மங்­க­ளுக்கு அமை­வாக திருத்­தி­ய­மைக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றது.

இது குறித்து ஆணைக்­கு­ழு­வா­னது நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாடு அமைச்சர் ஹர்­சன நாண­யக்­கா­ர­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில், ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வதை நோக்­காகக் கொண்ட சட்­ட­மொன்றின் தேவைப்­பாட்டை நாம் ஏற்­றுக்­ கொள்ளும் அதே­வேளை, அத்­த­கைய சட்­டங்கள் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள் மற்றும் இலங்கை ஏற்­றுக்­ கொண்ட சர்­வ­தேச மனித உரி­மைகள் பிர­க­ட­னங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு அமைய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்றோம்.

அதற்­க­மைய தற்­போது முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களைத் தடுப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தின் உள்­ள­டக்­கங்கள் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பிர­க­ட­னங்கள் என்­ப­வற்­றுக்கு முற்­றிலும் முர­ணா­ன­வை­யாக அமைந்­துள்­ளன.

அத்­தோடு, இச்­சட்­ட­மூ­ல­மா­னது 1979ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விடவும் மிக மோச­மா­ன­தாக அமையக் கூடும். இச்­சட்­ட­மூ­ல­மா­னது உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் தரத்­துக்கும் குறை­யாத பொலிஸ் அதி­கா­ரி­யிடம் அளிக்­கப்­படும் வாக்­கு­மூ­லத்தை சாட்­சி­ய­மாக ஏற்றுக் கொள்­வ­தற்கு இட­ம­ளிப்­ப­துடன் இச்­சட்­ட­மூ­லத்தின் ஏற்­பா­டுகள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் 16ஆவது பிரிவை மீள நிறுவும் வகையில் அமைந்­துள்­ளது.

இத்­த­கைய செயற்­பாடு நபர்­களை சித்­தி­ர­வதை செய்­வ­தற்கும் மிக மோச­மான நடத்­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கும் வழி­கோலும் என்­பதை நினை­வு­கூர விரும்­பு­கின்றோம் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று கடு­மை­யான குற்­றத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் ஒரு­வரை தடுத்து வைப்­ப­தற்கு பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரி­ட­மி­ருந்து தடுப்­புக்­காவல் உத்­த­ரவைப் பெறு­வ­தற்கு இச்­சட்­ட­மூலம் பொலி­ஸா­ருக்கு அதி­கா­ர­ம­ளிக்­கி­றது. அது­மாத்­தி­ர­மன்றி இச்­சட்­ட­ மூ­லத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் ‘கடு­மை­யான குற்றம்’ என்ற பதத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் பரந்­து­பட்ட வரை­வி­லக்­கணம் குறித்தும் நாம் தீவிர கரி­ச­னை­ய­டை­கிறோம்.

நப­ரொ­ருவர் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய குழுவின் உறுப்­பி­னரா என்­பதை தீர்­மா­னிப்­பதில் இச்­சட்­ட­மூலம் இலங்கை பிர­ஜைகள் மீது மிகப் பரந்­து­பட்­டதும் நியா­ய­மற்­ற­து­மான சந்­தே­கத்தை பிர­யோ­கிக்­கி­றது என்றும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தனது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களை தடுக்கும் சட்­ட­மூலம் பயங்­க­ர­மா­னது என்று எச்­ச­ரித்­துள்­ள­துடன் அதனை மறு­சீ­ர­மைக்­கு­மாறும் கோரி­யி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது பக்­கச்­சார்­பின்றி நடு­நி­லை­மை­யாக நின்று அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சட்­ட­மூ­லத்தை கடு­மை­யாக எதிர்த்­துள்­ளமை பாராட்­டத்­தக்க செயற்­பா­டாகும்.உண்­மை­யி­லேயே மனித உரி­மை­களை மீறும் வகையில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்த ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களை தடுக்கும் சட்­ட­மூலம் உட­ன­டி­யாக மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்டும்.

அதே­போன்றே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­துக்குப் பதி­லாக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தை பாது­காக்கும் சட்­ட­மூ­லத்தின் சரத்­துக்கள் தொடர்­பிலும் மனித உரிமை ஆர்­வ­லர்கள் ஆராய்ந்­தி­ருக்­கின்­றனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தி­லுள்ள விட­யங்­களை விடவும் அதி­க­பட்ச அடக்­கு­மு­றை­களை உள்­ள­டக்­கிய விதத்தில் இந்த சட்­ட­மூலம் அமைந்­துள்­ள­தாக அவர்கள் குற்­றம்­ சாட்­டி­யி­ருக்­கின்­றனர்.உரிமைகள் அறிக

உள்­ளூ­ரி­லுள்ள பல்­வேறு மனித உரி­மைசார் அமைப்­புகள் இந்த சட்­ட­மூ­லத்தை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளன. இதே­போன்றே சர்­வ­தேச மன்­னிப்புச் சபை உட்­பட பல்­வேறு சர்­வ­தேச அமைப்­பு­களும் பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அரசைப் பாது­காக்கும் சட்­ட­மூ­ல­மா­னது சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் அமை­ய­வில்லை என்று குற்­றம்­சாட்டி வரு­கின்­றன.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விடவும் பார­தூ­ர­மான அம்­சங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே புதிய சட்­ட­மூலம் உள்­ள­தா­கவும் அவர்கள் விசனம் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்த இரு சட்­ட­மூ­லங்­க­ளையும் மீளப் பெறு­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான எதி­ர­ணி­யினர் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றனர்.

அண்­மையில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். வெளி­நாட்டு தூது­வர்கள் மற்றும் இரா­ஜ­தந்­தி­ரி­களை அழைத்து இந்த சட்­ட­மூ­லங்­க­ளி­லுள்ள பார­தூ­ர­த்தன்மை தொடர்பில் எடுத்துக் கூறி அவற்றை மீளப் பெறு­வ­தற்­கான அழுத்­தங்­களை கொடுக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை சிறு­பான்மைக் கட்­சி­களின் தலை­வர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­விடம் சுட்­டிக்­ காட்­டி­யி­ருந்­தனர்.

இதற்­கி­ணங்க கடந்த 25ஆம் திகதி எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அரசை பாது­காக்கும் சட்­ட­மூலம் மற்றும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களைத் தடுக்கும் சட்­ட­மூலம் என்­ப­வற்றில் காணப்­படும் பார­தூ­ர­மான தன்மை குறித்து இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்­திய எதி­ர­ணி­யினர் இந்த சட்­ட­மூ­லங்­களை மீளப் பெறு­வ­தற்­கான அழுத்­தங்­களை அர­சாங்­கத்­துக்கு கொடுக்க வேண்டும் என்றும் சுட்­டிக் ­காட்­டி­யி­ருக்­கின்­றனர்.

இவ்­வாறு இந்த இரு சட்­ட­மூ­லங்­க­ளையும் அமுல்­ப­டுத்த விடாது தடுப்­ப­தற்கு பெரும் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கங்கணம்கட்டி நிற்கின்றது. உண்மையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் என்பது நீக்கப்பட வேண்டும்.

அதனை நீக்கவேண்டும் என்று எதிரணியில் அங்கம் வகித்த போது மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தி வந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்று கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்திய போது அந்தப் போராட்டங்களில் மாவட்டம் தோறும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

கடந்த கால அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயன்ற போது அந்தச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி முழுமூச்சாக செயற்பட்டிருந்தது.

ஆனால், இன்று ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் விடுதலை முன்னணியை தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது அந்த சட்டத்தை விட அடக்கு முறைகளைக் கொண்ட சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்றமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க செயற்பாடல்ல.

எனவே, இந்த சட்டமூலங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!