Thursday, March 26, 2026
Huisதாயகம்இன்றைய இராசிபலன் (06.02.2026)

இன்றைய இராசிபலன் (06.02.2026)

மேஷம்

அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
பரணி: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
கார்த்திகை 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். வேலையில் கவனம் தேவை.
ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நன்மையாகும்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் வேலைப்பளு கூடும். நண்பர்கள் உதவியாக இருப்பர்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும்.
ஆயில்யம்: சகோதரர் உதவியால் உங்கள் வேலைகள் முடியும். நெருக்கடி நீங்கும்.

சிம்மம்

மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபார பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
பூரம்: தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். கடன் பிரச்னை குறையும்.
உத்திரம் 1: பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதி உண்டாகும்.
சித்திரை 1,2: முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்வு காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
சுவாதி: செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.
விசாகம் 1,2,3: மனக்கவலை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
அனுஷம்: உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.
பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நன்மையாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வேலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.
ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!