Sunday, April 26, 2026
Huisதாயகம்தாண்டிக்குளம் ரயில் விபத்து; சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு..!

தாண்டிக்குளம் ரயில் விபத்து; சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு..!

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (25) மாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!