கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 110 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், பிக்குகள் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் தலைமைத் பிக்கு, கம்பஹாவின் மீகஹமுல்ல பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.
1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்த போதைப் பொருள் பறிமுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதலாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதலுடன் துறவிகள் குழு ஒன்று கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.


Recent Comments