Sunday, April 26, 2026
Huisதாயகம்பிரான்ஸ் கடன் ஆவணங்களிலும் கை வைத்த ஹேக்கர்கள்; முறியடித்த காவல்துறை..!

பிரான்ஸ் கடன் ஆவணங்களிலும் கை வைத்த ஹேக்கர்கள்; முறியடித்த காவல்துறை..!

பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதே ஹேக்கர்களே இந்த ஆவணங்கள் காணாமல் போனதற்கும் காரணமாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

காணாமல் போயுள்ள கோப்புகள் பிரான்ஸ் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை தொடர்பானவை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்றுமொரு பாரிய நிதி மோசடியை முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட சைபர் தடயவியல் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

இதன் ஒரு கட்டமாக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கொடுப்பனவு மோசடியும் இதே திணைக்களத்தின் ஊடாகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!