Monday, April 27, 2026
Huisதாயகம்யாழில் மனைவி மற்றும் சகோதரன் மீதும் கணவன் கத்தி குத்து தாக்குதல்..!

யாழில் மனைவி மற்றும் சகோதரன் மீதும் கணவன் கத்தி குத்து தாக்குதல்..!

யாழ் – சாவகச்சேரி பகுதியில் இன்றைய தினம் (27) கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களை வீதியில் இழுத்து விழுத்திய கணவன், மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டார்.

இதன் போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந் நிலையில் சந்தேக நபரான கணவனை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடமிருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!