Tuesday, April 28, 2026
Huisதாயகம்வவுனியாவில் விபத்துக்குள்ளாகிய தொடருந்து; பரிதாபகரமாக உயிரிழந்த முதியவர்..!

வவுனியாவில் விபத்துக்குள்ளாகிய தொடருந்து; பரிதாபகரமாக உயிரிழந்த முதியவர்..!

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(28.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து, தோணிக்கல் ஆலடி தொடருந்து கடவைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போதே குறித்த இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் தொடருந்து பாதையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!