Tuesday, August 4, 2026
Huisஇந்தியாஉதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும் எனவும் உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது, அரச தலைமை சட்டத்தரணி கூறுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை சிறையிலடைக்கும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் காவல்துறை பிணையில் விடுவிக்கப்படுவார்“ என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!