Monday, August 10, 2026
Huisதாயகம்வருட இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள்..!

வருட இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள்..!

இன்று (10) ஆரம்பமாகிய 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று காலை (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றுகின்றனர்.

இன்று ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகள் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பரீட்சை மண்டபங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை எனவும், பரீட்சை விதிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!