தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர்களின் சிக்கல்களை தீர்ப்பதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
சில பாடசாலைகளில் அதிபர்கள் மேலதிகமாக காணப்படுவதுடன் சில பாடசாலைகளில் அதிபர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
நினைத்த மாத்திரத்தில் அதிபர்களை இடமாற்றம் செய்ய முடியாது எனவும் இடமாற்றங்கள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கூறினார்.

சில பாடசாலைகளில் அதிபர்களுக்கு வெற்றிடம் காணப்படுகின்ற போதிலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக கோரிக்கை விடுக்கப்படாத நிலை உள்ளதாகவும்
அண்மையில் இடம்பெற்ற அதிபர்களுக்கான பரீட்சையின் மூலம் குறிப்பிடத்தக்க அதிபர்களை எதிர்காலத்தில் சேவையில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதிபர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் விரைவில் திட்டமொன்று வகுக்கப்படும் எனவும் மேலதிகமாக அதிபர்கள் இருந்தால் அவர்களை வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு மட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன மேலும் கூறினார்.


Recent Comments