Thursday, August 13, 2026
Huisதாயகம்யாழில் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள்; இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு..!

யாழில் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள்; இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு..!

யாழ் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!