கிளிநொச்சி வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன் குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments