முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந் நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே தங்கியுள்ளது, அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும்.
அதற்கமைய, ஒரு அரசாங்கமாக மனித வள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே உள்ளது. அபிவிருத்தியடைந்த மனித வளமே என்றாவது ஒருநாள் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும். ஒரு அரசாங்கமாக நாம் மனித வள மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கிறோம்.
அதற்காகவே கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். இந்த கல்வியில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் நம்புகிறோம். எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி செலுத்தும் வயதையும் 40 ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம்.
பாடசாலை சென்று முடிந்த உடனேயே முச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வர முடியாது என்றார்.


Recent Comments