வன்னிப் பெருநிலப் பரப்பினதும் ஈழத்தின் இறுதி தமிழ் மன்னனுமான மாவீரன் பண்டார வன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக் கோட்டையில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 25.08.2026இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் உணவெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப் பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிறோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Recent Comments