யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் இந்த அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமல் ராட்நாயக்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது காங்கேசன்துறை முகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை அபிவிருத்தி செய்ய பின்னிக்கிறது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை பணத்தை வழங்கியிருக்கிறது.
அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது. அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம் ஆனால் எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்.
மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று கட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது அபிவிருத்தி தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் மற்றும் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Recent Comments